சிம்புவுடன் இணையும் மூன்றாவது இசையமைப்பாளர்

  • IndiaGlitz, [Thursday,March 16 2017]

தமிழ்திரையுலகில் சகலகலா வல்லவனாக அனைத்து துறையிலும் கால்பதிக்கும் ஒருசிலரில் சிம்புவும் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே. நடிகர், பாடலாசிரியர், பாடகர், இயக்குனர் என பல்வேறு துறைகளில் கால்பதித்த சிம்பு தற்போது சந்தானம் நடிக்கும் 'சக்க போடு போடு ராஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகின்றார்.
சிம்புவின் இசையில் இந்த படத்திற்காக ஏற்கனவே பிரபல இசையமைப்பாளர்களான யுவன்ஷங்கர் ராஜா, அனிருத் ஆகியோர் தலா ஒரு பாடலை பாடியுள்ள நிலையில் தற்போது மூன்றாவதாக இன்னொரு இசையமைப்பாளரும் ஒரு பாடலை பாடியுள்ளார். அவர்தான் இளம் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ். காஞ்சனா, கோ 2, கவலை வேண்டாம் ஆகிய படங்களுக்கு இசையமைத்த லியோன் ஜேம்ஸ் தற்போது கிருஷ்ணா நடித்து வரும் 'வீரா' படத்திற்கு இசையமைத்து வருகிறார்
சக்க போடு போடு ராஜா' படத்திற்காக சிம்பு இசையில் லியோன் ஜேம்ஸ், 'உனக்காக உனக்காக' என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் சிறப்பாக உருவாகியிருப்பதாகவும், இந்த பாடல் அனைத்து தரப்பினர்களுக்கும் பிடிக்கும் என தான் நம்புவதாகவும் சிம்புவின் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.