படப்பிடிப்பில் குண்டு வெடித்து விபத்து.. 'லியோ' வில்லன் சஞ்சய்தத் டுவிட்டால் பரபரப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தின் முக்கிய வில்லனாக நடித்து வரும் சஞ்சய் தத் படப்பிடிப்பின் போது குண்டு வெடித்து விபத்து ஏற்பட்டதாகவும், இந்த விபத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இந்த செய்திக்கு நடிகர் சஞ்சய் தத் விளக்கம் அளித்துள்ளார்.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சஞ்சய் தத் என்பதும் இவர் கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. மேலும் சமீபத்தில் வெளியான ’கேஜிஎப் 2’ படத்தில் ஆக்ரோஷமான ‘அதீரா’ என்ற வில்லன் இவர் நடித்திருந்தார் என்பதும், இவரது கேரக்டர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் பேசப்பட்டது என்பது தெரிந்ததே.
இதையடுத்து தற்போது அவர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லியோ’ என்ற தமிழ் படத்தில் முக்கிய வில்லனாக நடித்து வருகிறார் என்பதும், சஞ்சய் தத், இந்த படத்தில் இணைந்ததும் தான் இந்த படம் இந்திய அளவில் பேசப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட படப்பிடிப்பில் சஞ்சய்தத்துக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவும் நிலையில் அதற்கு சஞ்சய் தத் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். படப்பிடிப்பில் நான் காயம் அடைந்ததாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் உண்மை அல்ல என்றும் கடவுள் அருளால் தான் நலமுடன் இருப்பதாகவும் படக்குழுவினர் தன்னை நன்றாக கவனித்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சஞ்சய் தத் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
There are reports of me getting injured. I want to reassure everyone that they are completely baseless. By God’s grace, I am fine & healthy. I am shooting for the film KD & the team's been extra careful while filming my scenes. Thank you everyone for reaching out & your concern.
— Sanjay Dutt (@duttsanjay) April 12, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com