'தலைவர் 171' திரைப்படத்தில் 'லியோ' வில்லனா? அப்ப LCU உறுதியா?

  • IndiaGlitz, [Friday,October 13 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 171’ என்ற திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் வரும் அடுத்த வாரம் வெளியாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் LCU படம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் ’தலைவர் 171’ திரைப்படமும் LCU படமாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ‘லியோ’ படத்தில் முக்கிய வில்லனாக நடித்த ஆக்சன் கிங் அர்ஜுன், ’தலைவர் 171’ திரைப்படத்திலும் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் ’தலைவர் 171’ திரைப்படமும் லோகேஷ் கனகராஜின் LCU படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘லியோ’ படத்தின் ரிலீசுக்கு பின்னர் ’தலைவர் 171’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படம் ஐமேக்ஸ் கேமராவினால் உருவாக்கப்பட்ட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

அஜர்பைஜானில் த்ரிஷா.. க்யூட் புகைப்படங்கள் வைரல்..!

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பிற்காக அஜித், த்ரிஷா உட்பட படக்குழுவினர் அஜர்பைஜான் சென்றனர்

இப்படி எல்லாம் போட்டோஷூட் எடுக்க ஒரு தில் வேணும்.. ரம்யா பாண்டியனின் வைரல் புகைப்படங்கள்..!

நடிகை ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் சில சமயம்  கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை

கவிதைக்கு தனிப்பெயர் தேவையில்லை.. ஆனால்.. செல்ல மகளுக்கு பெயர் வைத்த விஜய் டிவி புகழ்..!

விஜய் டிவி புகழ் மற்றும் அவரது நீண்ட கால தோழி பென்சி ஆகிய இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணமான நிலையில் சமீபத்தில் இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் இந்த குழந்தைக்கு

படிப்பை பத்தி உனக்கு ஏதாவது தெரியுமாடி? ஜோவிகாவுக்கு பதிலடி கொடுத்ததா 'எதிர்நீச்சல்' சீரியல்?

கடந்த சில நாட்களுக்கு முன்னாடி பிக் பாஸ் நிகழ்ச்சியில் படிப்பு குறித்து விசித்ரா மற்றும் ஜோவிகா ஆகியோர் இடையே பெரும் வாக்குவாதம் நடந்தது. எல்லோரும் படித்து டாக்டராகி விட்டால் கம்பவுண்டர் வேலையை

விஷாலுக்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த யோகிபாபு.. ஹரி படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யம்..!

 இயக்குனர் ஹரி இயக்கத்தில், விஷால் நடித்து வரும் 'விஷால் 34' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படப்பிடிப்பின் போது விஷாலுக்கு நடிகர் யோகி பாபு மறக்க முடியாத