'தலைவர் 171' திரைப்படத்தில் 'லியோ' வில்லனா? அப்ப LCU உறுதியா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 171’ என்ற திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் வரும் அடுத்த வாரம் வெளியாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் LCU படம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் ’தலைவர் 171’ திரைப்படமும் LCU படமாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ‘லியோ’ படத்தில் முக்கிய வில்லனாக நடித்த ஆக்சன் கிங் அர்ஜுன், ’தலைவர் 171’ திரைப்படத்திலும் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் ’தலைவர் 171’ திரைப்படமும் லோகேஷ் கனகராஜின் LCU படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘லியோ’ படத்தின் ரிலீசுக்கு பின்னர் ’தலைவர் 171’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படம் ஐமேக்ஸ் கேமராவினால் உருவாக்கப்பட்ட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout