த்ரிஷாவுக்கு ரத்தம் தானா? டிரைலருக்கு முன் வெளியான 'லியோ' போஸ்டர்..!

  • IndiaGlitz, [Thursday,October 05 2023]

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் ‘லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் இந்த படத்தின் நாயகி த்ரிஷாவின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை வெளியான ‘லியோ’ போஸ்டர்கள் அனைத்திலும் ரத்தவாடை இருந்த நிலையில் தற்போது த்ரிஷா போஸ்டர் இல்லம் ரத்தம் தான் காணப்படுகிறது.

அந்தோணி தாஸ் கேரக்டரில் நடித்த சஞ்சய் தத் போஸ்டர், ஹரால்ட் தாஸ் கேரக்டரில் நடித்த அர்ஜுன் போஸ்டர் மற்றும் இதுவரை வெளியான விஜய்யின் போஸ்டர் ஒரே ரத்தம் இருந்த நிலையில் த்ரிஷாவையும் லோகேஷ் கனகராஜ் விட்டு வைக்கவில்லையா என்று கமெண்ட்கள் குவிந்து வருகிறது. மொத்தத்தில் இன்று மாலை ‘லியோ’ ட்ரெய்லர் வெளியாக இருக்கும் நிலையில் சற்றுமுன் வழியாக த்ரிஷாவின் போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.