சென்சாருக்கு சென்று வந்த 'லியோ' டைட்டில் டீசர்.. எதற்கு தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,February 11 2023]

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படப்பிடிப்பில் விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் மேனன் உள்பட குழுவினர் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தி வருவதாகவும் இன்னும் இரண்டு மாதங்களுக்கு காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ‘லியோ’ படத்தின் டைட்டில் டீசர் வீடியோ வெளியானது என்பதும் இரண்டு நிமிடங்களுக்கு மேலிருந்த இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது இந்த டைட்டில் டீசர் சென்சாருக்கு சென்று வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. வரும் 17ஆம் தேதி தனுஷ் நடித்த ’வாத்தி’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இடைவேளையின்போது ‘லியோ’ படத்தின் டீசரை வெளியிட செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காகவே டைட்டில் டீசர் சென்சார் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

'சூர்யா 42' படத்திற்காக இவ்வளவு மெனக்கிடுகிறாரா சூர்யா? வேற லெவல் வீடியோ..!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 42' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வரலாற்று சம்பந்தமான

வெள்ளை நிறமே.. வெள்ளை நிறமே.. திடீரென கிளாமரை மறந்த ரம்யா பாண்டியன்..!

நடிகை ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வரும் நிலையில் திடீரென வெள்ளை நிறத்தில் துளியும் கிளாமர் இன்றி சேலை

கீர்த்தி சுரேஷின் வேற லெவல் வொர்க் அவுட்: வைரல் வீடியோ..!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் வேற லெவல் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்

அஜித் படத்தின் மீது போலீசில் புகார் அளித்த இயக்குனர்: என்ன காரணம்?

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக வெளியாகி ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் கடந்த ஆண்டு

ஒரே விழாவில் கமல்ஹாசன் அமீர்கான் அக்சயகுமார் மோகன்லால்: என்ன விசேஷம்?

 ராஜஸ்தானில் நேற்று நடந்த திருமண விழாவில் கமலஹாசன், அமீர்கான், கரன்ஜோகர், பிருத்திவிராஜ் சுகுமாரன், அக்ஷய்குமார், மோகன்லால் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி