காஷ்மீரில் நில அதிர்வு.. 'லியோ' படக்குழுவினர்களுக்கு என்ன ஆச்சு? அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
காஷ்மீர் உள்பட வட மாநிலங்களில் நேற்று நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்தி வரும் ’லியோ’ பட குழுவினர்களுக்கு என்ன ஆச்சு என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் இது குறித்து படத்தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அப்டேட் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை திடீரென ஆப்கானிஸ்தான் நாட்டில் 6.8 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் இந்தியா உள்பட பல நாடுகளில் எதிரொலித்தது. குறிப்பாக டெல்லி, காஷ்மீர், உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நில அதிர்வு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனை அடுத்து பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியே வந்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் காஷ்மீரில் விஜய் நடித்துவரும் லியோ’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் படக்குழுவினர்களுக்கு என்ன ஆச்சு என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது.
இது குறித்து தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ’நாங்கள் பாதுகாப்பாக உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் நேற்றே காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
We are safe nanba 😇
— Seven Screen Studio (@7screenstudio) March 21, 2023
- Team #LEO pic.twitter.com/WAOeiP94uM
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments