'லியோ' படப்பிடிப்புக்கு வந்த த்ரிஷாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழுவினர்.. க்யூட் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Monday,May 08 2023]

தளபதி விஜய் நடித்து வரும் ’லியோ’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட த்ரிஷாவுக்கு படக்குழுவினர் கொடுத்த சர்ப்ரைஸ் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் காஷ்மீரில் முடிவடைந்த நிலையில் தற்போது சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் விஜய், சஞ்சய் தத் உள்பட பலர் கலந்து கொண்டதாகவும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ’பொன்னியின் செல்வன் 2’ படத்தின் புரோமோஷன் பணிகளுக்கு சென்றிருந்த நடிகை த்ரிஷா தற்போது ’லியோ’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்து உள்ளார். அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்த போது படக்குழுவினர் அவருக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக பிறந்தநாள் கேக் ஏற்பாடு செய்திருந்தனர்.

கடந்த நான்காம் தேதி நடிகை த்ரிஷா தனது 40வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் விஜய்யுடன் த்ரிஷா இருக்கும் சிறப்பு போஸ்டர் படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் ’லியோ’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த போது பிறந்தநாள் கேக் ஏற்பாடு செய்து அவரை சர்ப்ரைஸ் அடைய செய்தனர். இதனை அடுத்து அந்த கேக்கை வெட்டி ’லியோ’ படக்குழுவினர்களுடன் நடிகை த்ரிஷா தனது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள 'லியோ’ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

திருமணத்திற்காக மதம் மாறினேனா? நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த குஷ்பு..!

நடிகை குஷ்பு திருமணத்திற்காக மதம் மாறியதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வரும் நிலையில் அந்த பதிவுக்கு நடிகை குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஹீரோவாகும் பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீம்.. இயக்குனர் இந்த பிரபலமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் மற்றும் டைட்டில் வின்னர்கள் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருவது புதிது அல்ல. ஏற்கனவே பிக் பாஸ் டைட்டில் வின்னர்களான ஆரி, ஆரவ் ஆகியோர்களும் ஹரிஷ்

'லால் சலாம்' படத்தில் ரஜினியின் கேரக்டர்.. அட்டகாசமான போஸ்டரை வெளியிட்ட லைகா..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் 'லால் சலாம்' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று மும்பையில் தொடங்க இருப்பதாக இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம்

ஏஆர் ரஹ்மான் இசையில் பாட்டு பாடிய வைகைப்புயல் வடிவேலு.. எந்த படத்தில் தெரியுமா?

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் வைகைப்புயல் வடிவேலு ஒரு பாடலை பாடியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ரஜினியுடன் கூடிய 'லால் சலாம்' போஸ்டர்.. ஐஸ்வர்யா ரஜினியின் சூப்பர் அறிவிப்பு.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.