ஜூன் மாதமே முடிகிறதா 'லியோ' படப்பிடிப்பு.. செம்ம அப்டேட்..!

  • IndiaGlitz, [Saturday,May 20 2023]

தளபதி விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் அதாவது ஜூன் மாதம் முடிவடைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, காஷ்மீர் உள்பட பல பகுதிகளில் நடந்து வந்தது என்பதும் தற்போது சென்னை பனையூர் அருகே இந்த படத்தின் முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதற்கான செட் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாதத்திற்குள் முடிக்க படக்குழு உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அக்டோபர் 19 இந்த படத்தின் ரிலீஸ் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளதால் ஜூன் மாதம் படப்பிடிப்பை முடித்துவிட்டு அதன்பின்னர் 3 மாதங்களில் தொழில்நுட்பப் பணிகளை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது பனையூரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் விஜய், அர்ஜுன், மன்சூர் அலிகான் ஆகியோர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ‘லியோ’ படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட ரூ.5 கோடி கேட்டாரா தமன்னா? அதிர்ச்சி தகவல்..!

பிரபல நடிகைகள் தற்போது ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பதும் சமந்தா உள்பட பலர் மிகப்பெரிய சம்பளத்திற்கு ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளனர்

பா ரஞ்சித்தின் கிரிக்கெட் படம்.. டைட்டில்-ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் கிரிக்கெட் கதை அம்சம் உள்ள படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

காஸ்ட்யூம் அடிமைகள்:  ஐஸ்வர்யா ராயை விமர்சித்தாரா பிரபல இயக்குனர்?

நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டிருக்கும் நிலையில் அவருடைய புகைப்படம் ஒன்றை பதிவு செய்து 'காஸ்டியூம் அடிமைகள்' என்று பிரபல இயக்குனர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு

குக் வித் கோமாளியில் இந்த வாரம் எலிமினேஷன் ஆவது செஃப் ஆ?

விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு கடந்த மூன்று சீசன்கள் போலவே மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 

சமந்தாவின் அடுத்த படத்தில் லிப்லாக், படுக்கையறை காட்சிகள்..? 'சாகுந்தலம்' தோல்வியில் இருந்து மீள்வாரா?

 சமந்தா நடித்த 'சாகுந்தலம்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி தோல்வி அடைந்த நிலையில் அவர் தற்போது நடித்து வரும் வெப் தொடரில் படுக்கையறை காட்சிகள் மற்றும் லிப்கிஸ் காட்சிகள் இருப்பதாக தகவல்