'லியோ' டிரைலரில் இருந்த கெட்ட வார்த்தை. அதிரடி முடிவெடுத்த படக்குழு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் வெளியான நிலையில் அந்த ட்ரெய்லரில் இருந்த ஒரு கெட்ட வார்த்தை குறித்து பெரும் சர்ச்சை சமூக ஊடகங்களில் இருந்தது.
இந்த கெட்ட வார்த்தையுடன் வெளியாகியுள்ள ’லியோ’ ட்ரெய்லர் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருவது சமூகத்திற்கு சீர்கேடு என ஒரு சில சமூகநல ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் ’லியோ’ ட்ரெய்லரிலிருந்து விஜய் பேசிய அந்த கெட்ட வார்த்தை மியூட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இது குறித்து விளக்கம் அளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ’அந்த வசனத்தை பேச சொன்னது நான்தான் என்றும், விஜய்க்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அது கோபத்தில் வரும் வார்த்தை என்று கூறி அவரை சமாதானம் செய்து பேச வைத்தேன் என்றும் அதற்கு முழு பொறுப்பு நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது படக்குழுவினர் ’லியோ’ ட்ரெய்லரில் இருந்த அந்த கெட்ட வார்த்தையை மியூட் செய்துள்ளனர். மியூட் செய்யப்பட்ட புதிய டிரைலர் வெளியாகி உள்ள நிலையில் இந்த பிரச்சனை இத்துடன் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com