ஒரே பனிமயம்.. 'லியோ' செட்டில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய லோகேஷ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்துவரும் 67வது திரைப்படமான ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக வட இந்தியா முழுவதும் கடும் பனியில் மூழ்கி இருக்கும் நிலையில் காஷ்மீரில் மிகப்பெரிய அளவில் பனி பொழிந்து வருகிறது. இந்த பனியில் படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்தி வருவது பெரும் சவாலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’லியோ’ படக்குழுவினரின் காஷ்மீரில் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி உள்ளது. அதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது குழுவினர்களுடன் இருக்கும் புகைப்படத்தின் பின்னணியில் எங்கு பார்த்தாலும் பனிபொழியும் காட்சிகள் உள்ளன.
ஆனால் அதே நேரத்தில் கடும் பனிப்பொழிவு இருந்தாலும் ஒவ்வொரு நாளும் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் விஜய் உள்பட அனைத்து நடிகர்களும், டெக்னீசியன்களும் படப்பிடிப்பிற்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. பனி சூழ்ந்துள்ள அழகான லொகேஷனில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதால் திரையில் காஷ்மீர் காட்சிகள் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout