'லியோ' அதிகாலை காட்சி வழக்கு.. நீதிமன்றத்தில் அரசு தரப்பு சொன்னது என்ன?

  • IndiaGlitz, [Monday,October 16 2023]

’லியோ’ திரைப்படத்தை அதிகாலை 4 மணி மற்றும் 7 மணி காட்சி திரையிட அனுமதிக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த மனுவுக்கு அரசு தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

’லியோ’ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி ரசிகர்கள் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணையில் அக்டோபர் 19ஆம் தேதி 6 காட்சிக்கு அனுமதி கேட்ட நிலையில் அரசு 5 காட்சிக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளதாகவும் அதிகாலை 4 மணி மற்றும் 7 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு ’சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிப்பதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளது என்று ரசிகர்கள் காட்சிக்கு அனுமதி அளிக்க கூடாது என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து இந்த வழக்கை சென்னைக்கு மாற்றியது குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி அனிதா சுமந்த், நாளை காலை முதல் வழக்காக இந்த வழக்கு விசாரிக்கப்படும் என தெரிவித்தார்.

எனவே நாளை இந்த வழக்கின் விசாரணையில் அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிக்கப்படுமா என்பது குறித்து தெரிய வரும்.