ஜீரோ டிகிரி வெப்பம்.. பிரமாண்டமான செட்.. 'லியோ' படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்துவரும் ‘லியோ’ என்ற படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படப்பிடிப்பில் விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் மேனன், அபிராமி வெங்கடாசலம் உள்ளிட்ட பல நடித்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.
காஷ்மீரில் தற்போது கடும்குளிர் நிலவி வருகிறது என்றும் இருப்பினும் குளிரையும் பொருட்படுத்தாமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு விஜய் உள்பட பட குழுவினர் அனைவரும் முழு ஒத்துழைப்பு தருவதாகவும் எனவே படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
இந்த நிலையில் காஷ்மீரில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட செட்டில் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் அங்கு ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பம் தான் இருக்கிறது என்றும் புகைப்படம் ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. அந்த புகைப்படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் அபிராமி வெங்கடாச்சலம் இருக்கும் நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments