'லியோ' படப்பிடிப்பு தளத்தில் பயங்கர குளிர்.. எத்தனை டிகிரி தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’லியோ’. இந்த படத்தின் வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில் அந்த வீடியோ பார்வையாளர்கள் எண்ணிக்கையில் மிகப்பெரிய சாதனை செய்துள்ளது.
இந்த நிலையில் ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் ஒட்டுமொத்த பட குழுவினர்களும் தனி விமானத்தில் காஷ்மீர் சென்றனர் என்பதும் இது குறித்த வீடியோவும் வெளியாகி வைரலானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் காஷ்மீரில் உள்ள பெஹல்காம் என்ற பகுதியில் தற்போது படப்பிடிப்பு நடைபெறுவதாகவும், படிப்பிடிப்பு நடைபெறும் அந்த பகுதியில் வெறும் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தான் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விஜய் உள்பட அனைவரும் படப்பிடிப்பிற்கு முழுமையான ஒத்துழைப்பு தந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. காஷ்மீரின் பல பகுதிகளில் இன்னும் ஒரு மாதத்திற்கு ’லியோ’ படத்தின் படப்பிடிப்பின் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 67’ படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout