நள்ளிரவில் வெளியான 'லியோ'வின் 'Badass' புரமோ.. இன்று மாலை ஒரு சம்பவம் இருக்குது..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தானதால் அதிருப்தியில் இருக்கும் ரசிகர்களை திருப்திப்படுத்துவதற்காக அடுத்தடுத்து அப்டேட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன.
குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று நள்ளிரவு திடீரென இந்த பாடலின் புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை முதல் சிங்கிள் பாடலாக வெளிவந்த ’நா ரெடி’ என்ற பாடலை எழுதிய விஷ்ணு எடவன் தான் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனிருத் குரலில் இந்த புரமோ வீடியோ இருப்பதால் இந்த பாடலையும் அவரே பாடியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடலின் புரமோ வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் பாடல் நிச்சயம் சம்பவம் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.
முதல் பாடலான ’நா ரெடி’ என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் இரண்டாம் பாடலும் உலகம் முழுவதும் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் மட்டுமே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
#Badass from 6pm today 🥁🥁🥁💥💥💥#Leo pic.twitter.com/1Q5c5YzPEz
— Anirudh Ravichander (@anirudhofficial) September 27, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com