ரோகிணி உட்பட அனைத்து தியேட்டர்களிலும் 'லியோ'.. ஆனாலும் சில அதிருப்திகள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் நேற்று ’லியோ’ திரைப்படம் திரையிடப்படவில்லை என அறிவிப்பு பலகை வைத்த நிலையில் தற்போது அந்த தியேட்டர் உட்பட சென்னையில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து தியேட்டர்களிலும் ’லியோ’ திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.
ஆனால் அதே நேரத்தில் காலை 9 மணி முதல் காட்சி தொடங்கலாம் என அரசு அனுமதி அளித்த நிலையில் கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் 11:30 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்க உள்ளது. இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் ரோகிணி திரையரங்கில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
சென்னையின் பல திரையரங்குகளில் 9 மணி காட்சி திரையிடப்பட்டாலும் ஒரு சில முக்கிய திரையரங்குகளில் 10,30, 11,30 என காட்சிகள் ஆரம்பமாவதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்
இன்று அதிகாலை 4 மணிக்கு இந்தியாவின் பல பகுதிகளில் ’லியோ’ திரைப்படம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில் தமிழக விஜய் ரசிகர்கள் மற்றும் இன்னும் படத்தை பார்க்க முடியாமல் இருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Security stepped up at Rohini theatre in Chennai ahead of #LeoFDFS.
— Shilpa (@Shilpa1308) October 19, 2023
A massive crowd had turned up at the theatre for the #Leo trailer release few days back and even last evening when the ticket bookings opened. pic.twitter.com/Fa4X7IyOjS
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments