'லியோ' ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா? மாஸ் தகவல்..!

  • IndiaGlitz, [Wednesday,September 27 2023]

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான ’லியோ’ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

இந்த படத்தின் வியாபாரத்தை பார்க்கும் போது இந்த படம் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய், அனிருத் ,லோகேஷ் கூட்டணியில் உருவான இந்த படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது. இந்த படத்தின் ரன்னிங் டைம் 159 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 39 நிமிடங்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே விஜய்யின் முந்தைய படமான ’வாரிசு’ 2 மணி நேரம் 47 நிமிடங்களும், ‘பீஸ்ட்’ 2 மணி நேரம் 36 நிமிடங்கள் இருந்ததால் அதை ஒட்டிய இந்த படத்தின் ரன்னிங் டைம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் படக்குழுவினர் ரன்னிங் டைம் குறித்த தகவலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.