ஆயுத பூஜைக்கு சோலோவாக ரிலீஸ் ஆகும் 'லியோ' : முக்கிய நடிகரின் படம் பின்வாங்குவதாக தகவல்..!

  • IndiaGlitz, [Saturday,June 24 2023]

தளபதி விஜய் நடித்து வரும் ‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதே தேதியில் ரிலீஸ் ஆக திட்டமிடப்பட்டிருந்த திரைப்படம் ஒன்று தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதத்திற்குள் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்னொரு பக்கம் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் கேரளா ரிலீஸ் உரிமையை கோகுலம் என்ற நிறுவனம் பெற்றுள்ளதை அடுத்து கேரளாவில் அதிக திரையரங்குகளில் ‘லியோ’ படத்தை வெளியிட அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் அக்டோபர் 19ஆம் தேதி பிரித்விராஜ் சுகுமாரன், அமலாபால் நடிப்பில் உருவான ’ஆடு ஜீவிதம்’ என்ற படமும் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி ‘லியோ’ திரைப்படம் வெளியாக இருப்பதை அடுத்து ’ஆடு ஜீவிதம்’ திரைப்படம் இரண்டு வாரங்கள் ரிலீஸ் தள்ளி போகும் என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனவே தளபதி விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் கேரளாவில் உள்ள நிலையில் அம்மாநிலத்தில் ‘லியோ’ படம் சோலோவாக ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.

More News

'லியோ' படத்தில் அர்ஜுன் லுக் இதுவா? இதுவரை இவரை இப்படி பார்த்ததே இல்லையே..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' திரைப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் ஒரு முக்கியத்துவம் வேடத்தில் நடித்து வரும் நிலையில் 'லியோ' படத்தில் அவருடைய கேரக்டரில் லுக் குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

யூடியூப் பாடகரை கண்டுபிடித்த ஹாரிஸ் ஜெயராஜ்.. ஒரே நேரத்தில் 2 இயக்குனர்கள் படங்களில் வாய்ப்பு..!

பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், யூடியூபர் ஒருவரை பாடகர் ஆக தேர்வு செய்த நிலையில் அந்த பாடகர் ஒரே நேரத்தில் இரண்டு பிரபல இயக்குனர்கள் படங்களில் பாடும் வாய்ப்பை பெற்று உள்ளார் என்ற தகவல் ஆச்சரியத்தை

மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், ஷாம்லி கலந்து கொண்ட 'SHE'-யில் கலை நிகழ்ச்சி..!

இயக்குநர் மணிரத்னம் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடிகை ஷாம்லியின் தனி கலை நிகழ்ச்சியான 'SHE'-யில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்!

விஜய் சார் டென்சன் ஆகிட்டார் - ECR சரவணன்

தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தின் சென்னை புறநகர் தலைவர் ECR Saravanan

“கிங் ஆஃப் கோதா” படத்தின் கேரக்டர்கள் அறிமுகம். பெருமையுடன் வெளியிட்ட ஜீ ஸ்டுடியோ..!

Zee Studios மற்றும்  Wayfarer Films இணைந்து வழங்கும்  'கிங் ஆஃப் கோதா', ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.