close
Choose your channels

முதல் நாளில் 3000 காட்சிகள்.. தமிழகத்தில் அல்ல, அண்டை மாநிலத்தில்.. 'லியோ'வின் சாதனை..!

Thursday, July 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யின் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது என்றால் தமிழகத்தில் உள்ள 90% திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்பதும் அவருடைய படத்திற்கு போட்டியாக பெரும்பாலும் பெரிய படங்கள் போட்டிக்கு வராது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அக்டோபர் 19ஆம் தேதி ’லியோ’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்களில் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் 90% திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக கேரளாவில் உள்ள 650 திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளதாகவும் முதல் நாள் இந்த படம் சுமார் 3000 காட்சிகள் திரையிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

தமிழகத்தை போலவே விஜய்க்கு கேரளாவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதால் முதல் நாள் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய சாதனையை ’லியோ’ திரைப்படம் பிசினஸில் பெற்றுள்ள நிலையில் வசூலிலும் அதே போல் பெரும் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ள ‘லியோ’ படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment