முதல் நாளில் 3000 காட்சிகள்.. தமிழகத்தில் அல்ல, அண்டை மாநிலத்தில்.. 'லியோ'வின் சாதனை..!

  • IndiaGlitz, [Thursday,July 27 2023]

தளபதி விஜய்யின் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது என்றால் தமிழகத்தில் உள்ள 90% திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்பதும் அவருடைய படத்திற்கு போட்டியாக பெரும்பாலும் பெரிய படங்கள் போட்டிக்கு வராது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அக்டோபர் 19ஆம் தேதி ’லியோ’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்களில் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் 90% திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக கேரளாவில் உள்ள 650 திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளதாகவும் முதல் நாள் இந்த படம் சுமார் 3000 காட்சிகள் திரையிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

தமிழகத்தை போலவே விஜய்க்கு கேரளாவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதால் முதல் நாள் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய சாதனையை ’லியோ’ திரைப்படம் பிசினஸில் பெற்றுள்ள நிலையில் வசூலிலும் அதே போல் பெரும் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ள ‘லியோ’ படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் ஷாலு ஷம்மு .. வைரல் வீடியோ..!

தமிழ் திரையுலகில் கிளாமர் நடிகைகளில் ஒருவரான ஷாலு ஷம்மு சமீபத்தில் வொர்க்-அவுட் செய்யும் வேற லெவல் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. 

நீச்சல் குளத்தில் பூஜா குமாரின் செம்ம ஜாலியான வீடியோ.. உடன் இருப்பது யார்ன்னு பாருங்க..!

உலகநாயகன் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்' உள்பட ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை பூஜா குமார் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டரை வயது மகளுடன் நீச்சல் குளத்துடன்

WWE பிரபலம் ஹல்க் ஹோகனுக்கு 3 ஆவது திருமணம்… 69 வயதில் அறிவிப்பு…!

அமெரிக்கா குத்துச்சண்டை தொலைக்காட்சி நிகழ்ச்சியான WWE மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் ஹல்க் ஹோகன்

ஒரே நேரத்தில் 3 சிகரங்களில் ஏறி சாதனை படைத்த 12 வயது சிறுமி…!

கோவா மாநிலத்தில் வசித்துவரும் 12 வயது சிறுமி ஒருவர் லடாக் பள்ளத்தாக்கில் இருக்கும் 6,000 மீட்டருக்கு மேல் அளவுள்ள 3 சிகரங்களில் அதுவும் 62.5 மணி நேரத்திற்குள் ஏறி புதிய சாதனை

நடிகை ராஷ்மிகா ரகசிய திருமணம் செய்துகொண்டாரா? லவ்வர் பற்றிய செம ஷாக்கான தகவல்…!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் ராஷ்மிகா மந்தனா ரகசியத் திருமணம்