அண்டை மாநிலத்தில் அதிக வசூல் செய்த 'லியோ': அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலையும் வாரி குவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். தமிழ்நாடு உள்பட உலகம் முழுவதும் இந்த படம் 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகவும் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி ஷேர் அளித்த முதல் தமிழ் திரைப்படம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் ‘லியோ’ தான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் கேரளா ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் ’கேரளா சினிமா பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றில் அதிக வசூலை கொடுத்த முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
‘லியோ’ திரைப்படம் வசூலில் ஏற்கனவே பல சாதனைகளை புரிந்துள்ள நிலையில் தற்போது கேரளாவில் நம்பர் ஒன் படமாக உருவாகி இருப்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Rest in peace box-office records 🔥#Leo#Thalapathy @actorvijay @duttsanjay @akarjunofficial@Dir_Lokesh @anirudhofficial@7screenstudio@Jagadishbliss#GokulamGopalan#VCPraveen#BaijuGopalan@srkrishnamoorty #SreeGokulamMovies#DreamBigFilms pic.twitter.com/vqH8hDfTZO
— SreeGokulamMovies (@GokulamMovies) November 5, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments