'லியோ' படத்திற்கு கிடைத்த ஒத்துழைப்பு.. அரசுக்கு 2 மாதம் கழித்து நன்றி சொன்ன தயாரிப்பாளர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியான நிலையில் இரண்டு மாதம் கழித்து தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்திற்கு சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்த ஜம்மு காஷ்மீர் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
’லியோ’ படத்தை தயாரித்த செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது: ஜம்மு காஷ்மீரில் எங்கள் திரைப்படமான ’லியோ’ படத்தின் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஜம்மு காஷ்மீர் அரசு, ஜம்மு காஷ்மீர் கவர்னர் திரு மனோஜ் சின்ஹா, தகவல் மற்றும் சுற்றுலாத்துறை மற்றும் அனைத்து பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
காஷ்மீர் எப்பொழுதும் நமது எதிர்கால திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும். படப்பிடிப்பை சிரமமின்றி நடத்த உதவிய அனைவருக்கும் எனது நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.
’லியோ’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் நடைபெற்ற நிலையில் காஷ்மீர் அரசு உள்பட உதவி செய்த அனைவருக்கும் லியோ தயாரிப்பாளர் தனது சமூக வலைத்தளத்தில் மேற்கண்டவாறு நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
We would like to extend our heartfelt gratitude to Government of J&K, Lt Governor Mr Manoj Sinha, Information Deptt, Tourism and all Security Agencies for cooperating for our film *LEO* in Kashmir. #Kashmir will always remain as a part of our future plans. Kudos to everyone who…
— Seven Screen Studio (@7screenstudio) January 8, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com