'லியோ' தயாரிப்பாளர் மிரட்டப்பட்டாரா? சவுக்கு சங்கர் ட்விட்டிற்கு லலித் விளக்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
’லியோ’ தயாரிப்பாளர் திமுக குடும்பத்தினரால் மிரட்டப்பட்டார் என சவுக்கு சங்கர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் ’லியோ’ படத்தின் தயாரிப்பாளர் லலித் அதனை மறுத்துள்ளார்.
’லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 30ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த விளையாட்டு அரங்கத்திற்கு திமுக அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை என்றும் ’லியோ’ படத்தின் சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு ஆகிய ஏரியாக்களின் விநியோக உரிமையை கொடுத்தால் மட்டுமே ஆடியோ விழாவுக்கு அனுமதி வழங்கப்படும் என்று மிரட்டப்பட்டதாக அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த தகவலை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் தெரிவித்த அந்த தகவல் உண்மை இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sir, this is to clarify that this news is not true.. https://t.co/3qF7hBiviQ
— Seven Screen Studio (@7screenstudio) September 23, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments