மலேசிய விஜய் ரசிகர்களுக்கு ஜாக்பாட்.. இன்ப அதிர்ச்சி கொடுத்த 'லியோ' படக்குழு..!

  • IndiaGlitz, [Thursday,September 14 2023]

தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் தான் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மலேசியாவில் உள்ள விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்த நிலையில் தற்போது அங்குள்ள விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா முடிந்த பிறகு ‘லியோ’ படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்ச்சி ஒன்றை மிகவும் பிரமாண்டமாக மலேசியாவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது,

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே இசை வெளியீட்டு விழாவை மிஸ் செய்த மலேசியா விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இந்த தகவல் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் விஜய், த்ரிஷா உட்பட அனைவரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் ‘லியோ’ படத்தின் புரமோஷன் வேற லெவலில் இருப்பதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

ஒரே நேரத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை..! கோலிவுட் ஆச்சரியம்..!

ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகிய நான்கு மாஸ் நடிகர்களுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது  திரை உலகிற்கு வரும் நடிகைகளின் ஆசையாக இருக்கும்.

அமிர்கான் மகனுக்கு ஜோடியாகும் தமிழ் நடிகை.. வேற லெவல் தகவல்..!

பிரபல பாலிவுட் நடிகை அமீர் கானின் மகன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் தமிழ் நடிகை ஒருவர் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

சூர்யா-சுதா கொங்கரா படத்தின் நாயகி இவரா? 10 வருடங்களுக்கு பின் மீண்டும் ரீஎண்ட்ரி..!

சூர்யா மற்றும் சுதா கொங்கரா மீண்டும் இணையும் திரைப்படத்தின் நாயகியாக பத்து வருடத்திற்கு பின் பிரபல நடிகை ஒருவர் ரீஎண்ட்ரி செய்ய இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளன.

திடீரென அப்பா, அம்மாவை சந்தித்த தளபதி விஜய்.. வைரல் புகைப்படம்..!

தளபதி விஜய் தனது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்களுடன் சில ஆண்டுகள் பேசாமல் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் தந்தை, தாயை சந்தித்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஒரே ஜாதியா இருந்தாலும் தலக்கட்டு வேற வேற தான.. 'மார்கழி திங்கள்' டிரைலர்..!

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவான 'மார்கழி திங்கள்' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.