'வாரிசு' படத்தை விட இரு மடங்கு வியாபாரமா? 'லியோ' படம் குறித்த ஆச்சரிய தகவல்..!

  • IndiaGlitz, [Monday,April 03 2023]

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் 60 நாட்கள் காஷ்மீர் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இந்த படத்தின் வியாபாரம் நடந்தது என்றும் அது குறித்த தகவல்களும் கசிந்தது என்பதை பார்த்தோம். குறிப்பாக இதுவரை தமிழ் சினிமா கண்டிராத வகையில் மிக அதிக தொகைக்கு நெட்பிளிக்ஸ் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கி உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.



இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக ‘லியோ’ படத்தின் வெளிநாட்டு உரிமைகள் ரிலீஸ் குறித்த வியாபாரங்கள் தற்போது நடைபெற்று வருவதாகவும் ஒரு சில நாடுகளில் 'வாரிசு’ படத்தை விட இரு மடங்கு வியாபாரம் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் திரையுலக வரலாற்றில் அதிக பிசினஸ் செய்த படமாக ‘லியோ’ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித தயாரித்து வருகிறார். அனிருத் இசையில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

'சூது கவ்வும்' இரண்டாம் பாகத்தில் இந்த பிரபல நடிகரா? விரைவில் அறிவிப்பு..!

 கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான விஜய் சேதுபதியின் 'சூது கவ்வும்' என்ற திரைப்படம் நல்ல வெற்றி பெற்றதை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: திரையரங்குகளுக்கு முக்கிய கட்டுப்பாடு..!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜயகாந்த் வீட்டில் நடந்த 100வது பிறந்தநாள் விழா.. உறவினர்கள் வைரல் புகைப்படம்..!

விஜயகாந்த் வீட்டில் நடந்த 100வது பிறந்தநாள் விழாவுக்கு விஜயகாந்த் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வருகை தந்திருந்த நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

'பொன்னியின் செல்வன் 2' படத்திற்கு முன்பே ரிலீஸ் ஆகும் லைகாவின் இன்னொரு படம்; அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனம் தயாரித்த 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் அதற்கு இரண்டு

ராஷ்மிகா மந்தனாவின் புதிய படம்.. டைட்டிலை அறிவித்த பிரபல தயாரிப்பு நிறுவனம்..!

நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு இன்று காலை வெளியிடப் போவதாக பிரபல தயாரிப்பு நிறுவனம் ட்ரீம்வாரியர்ஸ் நேற்று தெரிவித்திருந்தது என்பதை பார்த்தோம்.