'கபாலி' சாதனையை முறியடிக்காத 'லியோ'.. ரஜினி தான் இன்னும் நம்பர் ஒன்..!
- IndiaGlitz, [Friday,October 20 2023]
தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் நடுநிலை ரசிகர்கள் இந்த படத்திற்கு கலவையான விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர்.
விஜய், த்ரிஷாவின் நடிப்பு, அனிருத் இசை, அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கம் ஆகிய நன்றாக இருந்தாலும் லோகேஷ் கனகராஜ் திரைக்கதையில் சொதப்பி இருப்பதாகவும் குறிப்பாக இரண்டாம் பாதி எதிர்பார்த்த அளவில் இல்லை என்றும் ஒரு சில விமர்சகர்கள் தங்களது விமர்சனத்தில் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் ’லியோ’ படம் பிரிமியர் வசூலில் மிகப்பெரிய வசூலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தென் அமெரிக்காவில் ’லியோ’ திரைப்படம் பிரிமியர் காட்சிகளில் மட்டும் 583 இடங்களில் $1,563,201 வசூல் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வசூல் பிரிமியர் காட்சிகளின் வசூலில் தமிழ் திரைப்படங்களில் இரண்டாவது மிகப்பெரிய வசூல் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’கபாலி’ முறியடிக்கப்படாமல் இன்னும் முதல் இடத்தில் உள்ளது என்பதும் ரஜினி தான் இன்னும் நம்பர் ஒன் பிரிமியர் வசூலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் வெளியான இந்திய படங்களில் மிக அதிக பிரீமியர் வசூலில் ’லியோ’ இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிமியர் வசூலை அடுத்து ஓப்பனிங் நாள் வசூலில் ‘லியோ’ நிச்சயம் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.