சஞ்சய் தத் உடன் விஜய் மோதும் ஆக்ரோஷமான 'லியோ' போஸ்டர்.. வேற லெவல் எதிர்பார்ப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் கடந்த மூன்று நாட்களாக மூன்று விதமான போஸ்டர் வெளியாகிய நிலையில் இன்று ஒரு போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த போஸ்டரில் சஞ்சய் தத் உடன் விஜய் மோதும் அட்டகாசமான காட்சி இருப்பதை அடுத்து இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் கடந்த மூன்று போஸ்டர்களை மூன்று விதமான டேக் லைன் இருந்த நிலையில் இந்த போஸ்டரில் KEEP CALM AND FACE THE DEVIL என்ற டேக்லைன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமைதியாக இருந்து எதிரியை எதிர்கொள் என்ற அர்த்தமுள்ள இந்த டேக் லைன் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மொத்தத்தில் இதுவரை வெளியாகிய நான்கு போஸ்டர்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று உள்ளது என்பதும், இந்த போஸ்டர்களால் படத்திற்கு வேற லெவல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
KEEP CALM AND FACE THE DEVIL
— Seven Screen Studio (@7screenstudio) September 21, 2023
Witness the ultimate face-off on October 19th 🤜🤛#LeoPosterFeast #LeoHindiPoster#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficial @Jagadishbliss @GTelefilms @SonyMusicSouth #Leo pic.twitter.com/5p3sfTXCb2
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com