'லியோ' தெலுங்கு பதிப்பிற்கு தடை.. திடீரென ஏற்பட்ட திருப்பம்..!

  • IndiaGlitz, [Wednesday,October 18 2023]

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான ’லியோ’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் நேற்று திடீரென இந்த படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு தெலுங்கானா மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

D ஸ்டுடியோ என்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ’லியோ’ திரைப்படத்தை அக்டோபர் 20ஆம் தேதி வரை வெளியிட தடை என உயர் நீதிமன்றம் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ’லியோ’ திரைப்படம் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் வெளியாகாது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

D ஸ்டுடியோ நிறுவனம் ’லியோ’ திரைப்படம் வெளியாக என்ஓசி வழங்கி உள்ளதாகவும் இன்று தங்களுடைய வழக்கை அந்நிறுவனம் வாபஸ் பெறுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து ’லியோ’ திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு ஏற்பட்ட சிக்கல் தீர்ந்துள்ளது என்பதும் இந்த தகவல் நீதிமன்றத்துக்கு சென்ற பிறகு ’லியோ’ படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More News

'லியோ' படம் பார்த்த உதயநிதி ஸ்டாலின்.. LCU ரகசியத்தை லீக் செய்ததால் பரபரப்பு..!

விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் நேற்று இரவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 'லியோ' படத்தை பார்த்ததாக தெரிகிறது.

 திரையரங்குகளில் இனி ட்ரெய்லர் ரிலீஸ் கிடையாது: அதிரடி அறிவிப்பு

திரையரங்குகளில் இனி ட்ரெய்லர் வெளியிட மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது  பரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சிவகார்த்திகேயன் மீது இமான் கூறிய குற்றச்சாட்டு.. இமானின் முதல் மனைவி கூறிய திடுக் தகவல்..!

பிரபல இசையமைப்பாளர் இமான் நேற்று யூடியூப் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் குறித்து கடும் குற்றச்சாட்டு ஒன்றை கூறினார். அவர் தனக்கு துரோகம் செய்து விட்டதாகவும்,

பிரசாந்த், பிரபுதேவா, மோகன்.. 'தளபதி 68' படத்தில் இணையும் இன்னொரு ஹீரோ..!

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'தளபதி 68' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதை பார்த்தோம்.

'கமல் 233' படத்தின் டைட்டில் இதுவா? கைவிடப்பட்ட டைட்டிலை வைக்க முடிவா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'கமல் 233' என்ற படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு கைவிடப்பட்ட படத்தின்