'லியோ' கிளைமாக்ஸ் மட்டுமே 3 வாரங்கள்.. லோகேஷ் கனகராஜின் வேற லெவல் திட்டம்..!

  • IndiaGlitz, [Monday,March 20 2023]

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் மட்டுமே மூன்று வாரங்கள் படமாக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய், த்ரிஷா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக காஷ்மீரில் நடைபெற்று வருகிறது என்பதும் கடும் குளிரிலும் விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’லியோ’ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பு இந்த வார இறுதியில் நிறைவடைவதாகவும் இதனை அடுத்து சென்னை திரும்பவும் படக்குழுவினர் சென்னையில் 10 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெறவிருப்பதாகவும், இதற்காக ஏர்போர்ட் செட் ஒன்று பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த செட்டில் கிளைமாக்ஸ் மட்டுமே மூன்று வாரங்கள் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த கிளைமாக்ஸ் படப்பிடிப்பில் விஜய்யுடன் சஞ்சய்தத், அர்ஜூ, கெளதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித தயாரித்து வருகிறார். அனிருத் இசையில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.