'லியோ' மடோனாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்.. பிரபல நடிகருக்கு ஜோடியாகும் வாய்ப்பு..!

  • IndiaGlitz, [Thursday,December 14 2023]

சமீபத்தில் வெளியான விஜய்யின் ‘லியோ’ படத்தில் அவருடைய தங்கை கேரக்டரில் நடித்த மடோனா செபாஸ்டியனுக்கு பிரபல நடிகருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

நடிகை மடோனா செபாஸ்டியன் ஏற்கனவே தமிழில் ‘காதலும் கடந்து போகும்’ ’பா பாண்டி’ ’கொம்பு வச்ச சிங்கம்டா’ உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்த நிலையில் ’லியோ’ படத்தில் விஜய்யின் தங்கை கேரக்டரில் அட்டகாசமாக நடித்திருந்தார். அவரது கேரக்டர் சில நிமிடங்களே வருவதாக இருந்தாலும் படத்தின் கதை அவருடைய கேரக்டரை மையம் கொண்டு தான் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மடோனா செபாஸ்டியன் தற்போது பிரபல நடிகர் பிரபுதேவா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2000 ஆண்டுகளில் பல வெற்றி பெற்ற திரைப்படங்களை இயக்கிய சக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தை ட்ரான்ஸ் இந்தியா மீடியா என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் டைட்டில் இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.