நயன்தாராவை இயக்கும் 'லியோ' பிரபலம்.. லேடி சூப்பர் ஸ்டார் காட்டில் மழை..!

  • IndiaGlitz, [Tuesday,July 04 2023]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணம் மற்றும் இரட்டை குழந்தைகளுக்கு பின்னர் திரைப்படங்களில் நடித்துக் கொள்வதை குறைத்துக் கொள்வார் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது முன்பை விட அவர் பிஸியாக இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே நயன்தாரா, ஜெயம் ரவியுடன் ’இறைவன்’ அட்லியின் இயக்கத்தில் ஷாருக்கான் உடன் ’ஜவான்’ நயன்தாராவின் 75வது படம் மற்றும் ‘தி டெஸ்ட்’ உள்ளிட்ட ஐந்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி நயன்தாரா ஒரு வெப் தொடரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வெப்தொடரை லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனர் விஷ்ணு எடாவன் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே ’லியோ’ படத்தில் இடம்பெற்ற, சமீபத்தில் வெளியான ’நா ரெடி’ என்ற பாடலையும் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெப் தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என்றும் நயன்தாரா முதன்முதலாக நடிக்க இருக்கும் வெப் தொடரில் நடிக்க உள்ளார் என்பதால் இதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

திருமணத்திற்கு பின்னரும் திரைப்படங்கள், வெப் தொடர் என தொடர்ந்து பிசியாக நடித்து கொண்டிருக்கும் நயனின் காட்டில் மழை என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.