தமிழில் 'லியோ' தான் இரண்டாவது படம்.. ரசிகர்களுக்கு செம்ம விருந்து காத்திருக்கு..!

  • IndiaGlitz, [Wednesday,August 09 2023]

தளபதி விஜய் நடித்த ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். மேலும் இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழில் ஏற்கனவே ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியான நிலையில் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் இரண்டாவது தமிழ்ப்படம் ‘லியோ’ என்பது தற்போது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது

உலக அளவில் வெளியாகும் திரைப்படங்கள் பெரிய திரை, துல்லியமாக காட்சிகள், ஒலி-ஒளி அமைப்பு ஆகியவை கொண்ட ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியான முதல் தமிழ் படம் என்ற பெருமையை ’பொன்னியின் செல்வன்’ பெற்றது

இந்த நிலையில் தற்போது ‘லியோ’ திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாக இருப்பதாக கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே ரசிகர்களுக்கு இந்த படம் மிகச் சிறந்த விருந்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.