இந்தியாவில் 'லியோ' படம் தான் முதல் முறை.. ஒளிப்பதிவாளர் பகிர்ந்த வீடியோ வைரல்..!
- IndiaGlitz, [Tuesday,June 20 2023]
தளபதி விஜய் நடித்து வரும் ‘லியோ’ படம் குறித்த ஆச்சரியமான செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் முதல்முறையாக KOMODO X என்ற கேமராவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘லியோ’ தான் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
‘லியோ’ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ‘லியோ’ படத்தின் அதிரடி ஆக்சன் காட்சிகளுக்கு KOMODO X என்ற கேமரா வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த கேமரா மூலம் இந்தியாவில் படமாக்கப்பட்ட முதல் திரைப்படம் ‘லியோ’ தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மனோஜ் பரமஹம்சா பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் சகோதரர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கேமரா சுமார் 7 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த கேமராவின் மூலம் அதிரடி ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டால் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவம் ஏற்படும் என்றும் இதுவரை ஹாலிவுட் படத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்பட்ட இந்த கேமரா தற்போது முதல் முறையாக ஒரு இந்திய படத்தில், அதிலும் தமிழ் படத்தில் பயன்படுத்தப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .
வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள 'லியோ’ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.