close
Choose your channels

லியோ.. விஜய்க்கு மட்டுமல்ல, இவருக்கும் 67வது படம் தான்: ஆச்சரிய தகவல்!

Sunday, February 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 67வது திரைப்படமான ’லியோ’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் வீடியோ சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் இணையதளங்களில் டிரெண்டாகி வருகிறது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் ’லியோ’ திரைப்படம் விஜய்க்கு மட்டும் 67-வது படம் அல்ல என்றும் இந்த படத்தின் நாயகியான த்ரிஷாவுக்கும் 67-வது படம் என்பது ஆச்சரியமான தகவலாக உள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு ’மெளனம் பேசியதே’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நடிகை த்ரிஷா அதன் பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், ஆர்யா, விஷால், தனுஷ், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் த்ரிஷா ’லியோ’ படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படம் அவரது 67-வது படம் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. விஜய் மற்றும் த்ரிஷா ஆகிய இருவருக்குமே 67வது படம் ’லியோ’ என்பது அபூர்வமான ஒற்றுமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

]

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment