'லியோ' 100% லோகேஷ் கனகராஜ் படம்.. முதல் விமர்சனம்..!

  • IndiaGlitz, [Friday,October 13 2023]

தளபதி விஜய் நடித்திருக்கும் ’லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த படம் ’ஜெயிலர்’ மற்றும் ’ஜவான்’ படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் பிரிட்டன் ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் முதல் விமர்சனத்தை பதிவு செய்துள்ளது.

’லியோ’ திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படம் என்றும் இந்த படத்தில் உள்ள ஆக்சன் மற்றும் வன்முறை காட்சிகள் கண்டிப்பாக 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கும் வகையில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 15 வயதுக்கு குறைவானவர்கள் பார்க்கும் வகையில் இந்த படத்தை அனுமதிக்கப் போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்த ’மாஸ்டர்’ திரைப்படம் அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில் இருந்த நிலையில் ’லியோ’ திரைப்படம் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கும் படம் என்பதால் இது முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

More News

'கல்யாணம் ஆயிருச்சா' என்று கேட்ட விசித்ரா.. ஆமாம் 4 தடவை ஆயிருச்சுன்னு கலாய்த்த மாயா.. பிக்பாஸ் 11 வது நாள்

பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் விசித்ரா செமையாக விளையாடினார். முதலில் ரவீனா மற்றும் மணி ரொமான்ஸாக பேசிக் கொண்டிருந்தபோது

எனக்கே ஒரு கட்டத்தில் 'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் ஆகுமான்னு சந்தேகம் இருந்தது: கெளதம் மேனன்

கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவான 'துருவ நட்சத்திரம்' என்ற திரைப்படம் வரும் நவம்பர் மாதம் ரிலீஸ் ஆகயிருக்கும் நிலையில் இந்த படம் நீண்ட வருடமாக கிடப்பில் இருந்ததால்

ஆமா, லவ் பண்றது உண்மைதான்.. காதலை போட்டுடைத்த பிக்பாஸ் போட்டியாளர்.. ஐஷுவுக்கு ஏன் வருத்தம்?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான மணி சந்திரா மற்றும் ரவீனா இருவரும் காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில் ஏற்கனவே விசித்ரா 'நீங்கள் ரெண்டு பேரும் லவ் பண்றீங்களா' என்று ஓபனாகவே கேட்டுவிட்டார்.

நம்மகிட்ட இனி வச்சுக்கவே கூடாது.. அப்படி வச்சு செய்யணும்.. மாயாவின் வேற லெவல் ஆவேசம்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்கள் மற்றும் பிக் ஹவுஸ் போட்டியாளர்கள் இடையே நாளுக்கு நாள் மோதல் போக்கு

சிங்கத்தின் கர்ஜனை.. கையில் தீப்பந்தம்.. 'லியோ' ஐமேக்ஸ் போஸ்டர் வேற லெவல்..!

தளபதி விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம், ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாக உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது படக்குழுவினர்களே அதிகாரப்பூர்வமாக ஐமேக்ஸ்