close
Choose your channels

'என்ன நண்பா ரெடியா? 'நா ரெடி' பாடல் ரிலீஸ் ஆகும் நேரம் இதுதான்..!

Thursday, June 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று தளபதி விஜய் பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவர் நடித்து வரும் ‘லியோ’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிங்கிள் பாடல் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பதை பார்த்தோம்.

அந்த வகையில் இன்று அதிகாலை 12 மணிக்கு ‘லியோ’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த அட்டகாசமான போஸ்டரை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

அந்த வகையில் அடுத்த கட்டமாக ’நா ரெடி’ பாடல் வெளியாகும் நேரம் குறித்து அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. ’நா ரெடி’ என்ற பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இது குறித்த புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டரை வைரல் ஆகி வருகிறது.

அனிருத் கம்போஸ் செய்த இந்த பாடலை லோகேஷ் கனகராஜின் இணை இயக்குனர் விஷ்ணு எடாவன் என்பவர் எழுதியுள்ளதாகவும் இந்த பாடலை விஜய், அனிருத் மற்றும் அசல் கோலார் ஆகிய மூவரும் இணைந்து பாடிய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாடல் ‘லியோ’ படத்தில் விஜய் அறிமுக பாடலாக உருவாகி இருப்பதாகவும் 2000 நடன கலைஞர்களுடன் இந்த பாடல் பிரமாண்டமாக படமாக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment