close
Choose your channels

'லியோ'வின் 'நா ரெடி' பாடலின் வரிகள் திடீர் நீக்கம்.. என்ன நடந்தது?

Sunday, September 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’லியோ’ திரைப்படத்தின் சிங்கிள் பாடலான ’நா ரெடி’ என்ற பாடல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது என்பதும் விஜய் பாடிய இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

ஆனால் அதே நேரத்தில் இந்த பாடலில் சில சர்ச்சைக்குரிய வரிகள் இருப்பதாகவும் அதே போல் விஜய் புகை பிடித்தபடி வருவதாகவும் கூறி ஒரு சில அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இது குறித்து சென்சார் வாரியத்திற்கு புகார் அனுப்பப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் சென்சார் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையின் போது ’லியோ’ படத்தில் இடம்பெற்ற ’நா ரெடி’ பாடலில் சில வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ’பத்தாது பாட்டில் நான் குடிக்க, அண்டா கொண்டா அடிக்க’ என்ற வரிகள், ’பத்த வச்சு புகையை விட்டா பவுரு கிக்கு’ என்ற வரிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அதேபோல் சிகரெட் பிடிப்பது போன்ற வரும் காட்சிகளையும் சென்சார் அதிகாரிகள் நீக்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment