'லியோ' ஐமேக்ஸ் பிரீமியர் காட்சிகள் திடீர் ரத்து.. இதுதான் காரணமா?

  • IndiaGlitz, [Saturday,October 14 2023]

தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் ஐமேக்ஸ் தொழில் நுட்பம் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருந்தனர்.

மேலும் அமெரிக்காவில் வரும் 18ஆம் தேதி ஐமேக்ஸ் திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது திடீரென ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் இந்த படம் அமெரிக்காவில் வெளியாகவில்லை என்று கூறியதை அடுத்து ஏற்கனவே முன் பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தை திருப்பி கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

குறித்த நேரத்தில் படக்குழுவினர் ஐமேக்ஸ் பிரதியை தரவில்லை என்றும் அதனால் தான் காட்சி ரத்து செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஐமேக்ஸ் தியேட்டர்களில் 'லியோ’ படத்தை பார்க்க ஆர்வத்துடன் இருந்த ரசிகர்கள் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர்

இருப்பினும் மற்ற திரையரங்குகளில் 'லியோ’ திரைப்படம் எந்தவித பிரச்சனையும் இன்றி, அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

More News

வேற லெவலில் வொர்க் அவுட் செய்யும் கீர்த்தி சுரேஷ்.. வைரல் புகைப்படம்..!

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ், சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவலில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை பதிவு

ஜோவிகாவின் 'போடா வாடா' உட்பட பல பஞ்சாயத்து.. கமல்ஹாசன் முடிவு என்ன? புரமோ வீடியோ..!

பிக்பாஸ் வீடு இந்த வாரம் ரணகளமாக இருந்தது என்பதும், குறிப்பாக ஸ்மால் ஹவுஸ் மற்றும் பிக் ஹவுஸ் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து இரு துருவங்களாக  மோதிக்கொண்டனர்

சூர்யாவுக்கு அடுத்த படத்தில் இந்த கேரக்டரா? பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் துள்ளும் இளமை..!

சூர்யாவின் அடுத்த திரைப்படமான 'சூர்யா 43' திரைப்படத்தை  சுதா கொங்கரா இயக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் இளமை துள்ளும் கல்லூரி மாணவன் கேரக்டரில்

ஜோதிகாவின் அடுத்த படம்.. ரிலீஸ் திட்டத்தில் திடீர் மாற்றம்..!

மம்முட்டி மற்றும் ஜோதிகா 13 ஆண்டுகளுக்குப் பின்னர் இணைந்து நடித்த 'காதல் - தி கோர்'  என்ற மலையாள திரைப்படம் முதலில் ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தை

முதல் 10 நிமிடத்தை மிஸ் பண்ணிடாதீங்க.. வேற லெவல் விருந்து காத்திருக்கு.. லோகேஷ் கனகராஜ்..!

தளபதி விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் பத்து நிமிடத்தை யாரும் மிஸ் செய்து விட வேண்டாம் என லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு