ஒரே ஒரு காட்சிக்கு மட்டும் ரூ.15 கோடி செலவு.. ஹாலிவுட்டுக்கு இணையாக உருவாகியுள்ள 'லியோ'!

  • IndiaGlitz, [Monday,September 18 2023]

தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் குறித்த ஆச்சரியமான தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஹாலிவுட் படத்திற்கு இணையாக ஒரு காட்சி இந்த படத்தில் உருவாக்கப்பட்ட இருப்பதாகவும் காஷ்மீரில் படமாக்கப்பட்ட இந்த ஒரே ஒரு காட்சிக்கு மட்டும் 15 கோடி ரூபாய் செலவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், லலித் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’லியோ’. இந்த படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பதும் இந்த படத்தில் விஜய்யுடன், த்ரிஷா, சஞ்சய்தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளதால் இந்த படத்திற்கு ஏற்கனவே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக விஜய், அர்ஜுன் மற்றும் சஞ்சய் தத் ஆகிய மூவரும் சந்தித்துக் கொள்ளும் காட்சி இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவுக்கு மாஸ் ஆக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம் பெற்ற Hyena Sequence காட்சி காஷ்மீரில் படமாக்கப்பட்டதாகவும் இந்த காட்சியை படமாக்கப்பட்டதற்கும் கிராபிக்ஸ் பணிகளுக்கு மட்டும் மொத்தம் 15 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி காஷ்மீரில் படமாக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்றும் தயாரிப்பாளர் லலித் கூறியுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் ஒவ்வொரு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் எதிர்பார்ப்பின் உச்சத்திற்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஏஜிஎஸ் நிறுவனத்தின் அடுத்த படம்.. டைட்டில் , ஹீரோ அறிவிப்பு..!

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

கார்த்தியின் 'கைதி 2' எப்போது? அவரே அளித்த பதில்..!

கார்த்தி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'கைதி' என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும்

விபத்துக்கு பின் திடீரென மாயமான டிடிஎஃப் வாசன்.. வலைவீசி தேடும் போலீசார்..!

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் நேற்று சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஹீலிங் செய்ய முயன்றதால் விபத்துக்குள்ளானார்

சூப்பர் சிங்கரில் கலக்கிய  இளம் பாடகி:  கட்டியணைத்து பாராட்டிய மாரி செல்வராஜ்..!!

தமிழில் இசை உலகில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். தற்போது கோலாகலமாக நடந்து வரும் ஜூனியர் சூப்பர் சிங்கர் 9 வது சீசன் நிகழ்ச்சியில், கடந்த வார நிகழ்ச்சியில் வெகு

நயன்தாரா அடுத்த படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ.. செம்ம டைட்டில்..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஜெயம் ரவி உடன் நடித்த 'இறைவன்' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க உள்ள அடுத்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ சற்றுமுன் வெளியாகி இணையத்தில்