close
Choose your channels

கிளிம்ஸ் ஆஃப் ஹரால்டு தாஸ் வீடியோ.. மிரட்டும் ஆக்சன் கிங் அர்ஜூன்..!

Tuesday, August 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் அவர் ஹரால்டு தாஸ் என்ற கேரக்டரில் நடித்துள்ளதாகவும் இந்த கேரக்டர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இன்று அர்ஜுன் தனது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிறந்தநாள் பரிசாக இந்த அறிவிப்பு இருந்தது.

இந்த நிலையில் சற்று முன்னர் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் ’லியோ’ படத்தில் அர்ஜுன் கேரக்டர் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

அதில் அதிரடியான ஆக்சன் கிங் அர்ஜுன் மாஸ் ஆக இருக்கும் காட்சிகள், ஸ்டைலாக வாயில் சிகரெட்டை வைத்துக் கொண்டிருக்கும் காட்சிகள் உள்ளன. இந்த கேரக்டரை பார்க்கும்போது அவர் ’லியோ’ படத்தில் ஆக்ரோஷமான வில்லனாக நடித்து வருகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விஜய்க்கு இணையான ஒரு முக்கிய கேரக்டர் அவருக்கு லோகேஷ் கனகராஜ் வழங்கி உள்ளார் என்பது இந்த வீடியோ மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘லியோ’ திரைப்படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர். லலித் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment