அண்டை மாநிலங்களில் உறுதி செய்யப்பட்ட 'லியோ' அதிகாலை காட்சி.. தமிழக ரசிகர்கள் அதிருப்தி
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் ‘லியோ’ திரைப்படம் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சிக்கு திரையிட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் அதிகாலை 4 மணி காட்சி உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள திரையரங்குகளில் ‘லியோ’ படத்திற்கான முன்பதிவு டிக்கெட் தொடங்கிய நிலையில் அதிகாலை 4 மணி, 7 மணி காட்சிகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து கேரளா மற்றும் கர்நாடகாவில் அதிகாலை 4 மணிக்கு காட்சி உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கும் போது கிட்டத்தட்ட கேரளாவிலும் கர்நாடகாவில் இரண்டு காட்சிகள் முடிவடைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிகாலை காட்சி தொடங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் தென்னிந்தியாவில் தமிழகத்தில் மட்டும் காலை 9 மணிக்கு ‘லியோ’ படத்தின் முதல் காட்சி தொடங்குவதால் விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com