அண்டை மாநிலங்களில் உறுதி செய்யப்பட்ட 'லியோ' அதிகாலை காட்சி.. தமிழக ரசிகர்கள் அதிருப்தி

  • IndiaGlitz, [Sunday,October 15 2023]

தமிழகத்தில் ‘லியோ’ திரைப்படம் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சிக்கு திரையிட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் அதிகாலை 4 மணி காட்சி உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள திரையரங்குகளில் ‘லியோ’ படத்திற்கான முன்பதிவு டிக்கெட் தொடங்கிய நிலையில் அதிகாலை 4 மணி, 7 மணி காட்சிகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து கேரளா மற்றும் கர்நாடகாவில் அதிகாலை 4 மணிக்கு காட்சி உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கும் போது கிட்டத்தட்ட கேரளாவிலும் கர்நாடகாவில் இரண்டு காட்சிகள் முடிவடைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிகாலை காட்சி தொடங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் தென்னிந்தியாவில் தமிழகத்தில் மட்டும் காலை 9 மணிக்கு ‘லியோ’ படத்தின் முதல் காட்சி தொடங்குவதால் விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

More News

அதை நான் காதால கேட்டேன்.. அஜித்தின் ரகசியத்தை வெளியிட்ட நடிகை அம்பிகா..!

அஜித் குறித்து இதுவரை வெளிவராத ரகசியம் ஒன்றை நடிகை அம்பிகா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

வெளிய போய் நம்பர் குடுடா.. நிக்சனிடம் கேட்ட பெண் போட்டியாளர்..!

 ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் மணி மற்றும் ரவீனா ரொமான்ஸ் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு ரொமான்ஸ் ஜோடி ஆரம்பமாகுமோ? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பள்ளியின் கோரிக்கையை நிறைவேற்றிய நடிகர் விஷால்.. மாணவ மாணவிகள் நன்றி..!

அரசு பள்ளியின் கோரிக்கையை ஏற்று நடிகர் விஷால் அரசு பள்ளிக்கு ஆண்ட்ராய்டு டிவி வாங்கி கொடுத்த நிலையில், அந்த பள்ளியின் மாணவ மாணவிகள் விஷாலுக்கு நன்றி தெரிவித்தனர்.

தீபாவளி ரிலீஸ் திரைப்படத்தை கைப்பற்றியது ரெட் ஜெயண்ட் மூவீஸ்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

வரும் தீபாவளி திருநாளில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 'ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்' மற்றும் கார்த்தி நடித்த 'ஜப்பான்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாக இருப்பது தற்போதைக்கு உறுதி

ஒரு டிக்கெட் கூட கவுண்டரில் இல்லை.. 4 நாட்களுக்கு ஹவுஸ்புல்.. விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்..!

சென்னையில் உள்ள முக்கிய திரையரங்கில் கவுண்டரில் ஒரு டிக்கெட் கூட கொடுக்காமல் ஆன்லைனில் ஒரு சில நிமிடங்களில் நான்கு நாட்களுக்கு உரிய 'லியோ' படத்தின் டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டதாக