அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பு.. ரிலீஸ் தேதியை மாற்றிய 'லியோ' தயாரிப்பாளர்..!

  • IndiaGlitz, [Saturday,October 07 2023]

தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கான இறுதி கட்ட புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் அதிகாலை காட்சி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் மட்டும் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்படாததால் விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

ஒரு சில விஜய் ரசிகர்கள் பெங்களூர், திருவனந்தபுரம், ஹைதராபாத் போன்ற பகுதிகளுக்கு சென்று அதிகாலை காட்சி பார்க்க திட்டமிட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை என்பதால் தயாரிப்பாளர் லலித் அதிரடியாக ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளதாக தெரிகிறது.

அதாவது ‘லியோ’ திரைப்படம் ரிலீஸுக்கு முந்தைய நாள் அதாவது அக்டோபர் 18ஆம் தேதி மாலை மற்றும் இரவு காட்சிகள், பிரீமியர் காட்சிகளாக திரையிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளன. தமிழகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் அக்டோபர் 18ஆம் தேதியே ‘லியோ’ திரைப்படம் பிரிமியர் காட்சிகளாக திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளனர்.

More News

கதை மீது நம்பிக்கை வைத்து  படம் எடுத்துள்ளனர். . நேற்று வெளியான படத்திற்கு சூர்யா வாழ்த்து..!

நேற்று த்ரிஷா நடித்த 'தி ரோட்', விஜய் ஆண்டனி நடித்த 'ரத்தம்' மற்றும் 'இறுகப்பற்று' உள்பட ஒரு சில படங்கள் வெளியான நிலையில் நேற்று வெளியான படம் ஒன்றுக்கு நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து

சென்சார் கட் இல்லாமல் ரிலீஸ் ஆவது உறுதி.. 'லியோ' விநியோகிஸ்தர் தகவல்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் சமீபத்தில் சென்சார் ஆனது என்பதும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் அளித்தனர் என்பதையும் பார்த்தோம்.

இதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும்.. மோடி தலையிட வேண்டும்: நடிகை ராதிகா ஆவேசம்..!

நடிகை ரோஜாவுக்கு தனது முழு ஆதரவு என தெரிவித்துள்ள நடிகை ராதிகா இந்த விஷயத்தில் மோடி தலையிட வேண்டும் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

ஜோவிகா தந்தை அனுப்பிய வீடியோவை பகிர்ந்த வனிதா..  விசித்ராவுக்கு பதிலடியா?

ஜோவிகா குறித்த வீடியோ ஒன்றை அவரது தந்தை வனிதாவிற்கு அனுப்பி வைக்க, அந்த வீடியோவை வனிதா தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.

'விடாமுயற்சி' நாயகி திடீர் மாற்றம்.. அஜித்துடன் இணையும் லோகேஷ் கனகராஜ் பட நாயகி..!!

அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது விறுவிறுப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தொடர்ச்சியாக