விஜய்யின் 'லியோ' இயக்குனர் லோகேஷ் கனகராஜின் லேட்டஸ்ட் ட்விட்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,March 01 2023]

தளபதி விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் முன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த ட்விட் வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் மேனன், ஆக்சன் கிங் அர்ஜுன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருவதாகவும் விஜய் மற்றும் த்ரிஷா மற்றும் தற்போது சென்னை திரும்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் தனது பகுதியின் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு மிஷ்கின் சென்னை திரும்பினார் என்பதும் அவர் இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து வெளியிட்ட அறிக்கை வைரலானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் மிஷ்கினுக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டரில் ஒரு ட்விட் பதிவு செய்துள்ளார். அதில் ’மிஷ்கின் அவர்களுக்கு ஒரு மில்லியன் நன்றி! இவ்வளவு நெருக்கமாக உங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை பெற்றது எனது அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன். உங்களுக்கு எனது மில்லியன் கணக்கான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரல் ஆகி வருகிறது.