close
Choose your channels

'எனக்கு எந்த ஆபத்தும் இல்லை, என்னால் தான் ஆபத்து': 'லியோ' படத்தின் வசனத்தை பகிர்ந்தாரா பிரபல நடிகர்?

Wednesday, June 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘லியோ’ திரைப்படத்தில் ஏற்கனவே ஒரு மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டம் நடித்துவரும் நிலையில் தற்போது பிரபல நடிகர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு வசனத்தை புகைப்படத்துடன் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தமிழ் நடிகர் ஹரிஷ் உத்தமன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ‘லியோ’ நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்கள் என்று அவர் கூறுவதும், அதற்கு விஜய், ‘நான் ஆபத்தில் இல்லை, என்னால் தான் ஆபத்து’ என்று கூறும் காட்சியும் புகைப்படத்தில் உள்ளது. இதனையடுத்து ஹரிஷ் உத்தமன் இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ படத்திலும் ஹரிஷ் உத்தமன் நடித்திருப்பதால், ‘லியோ’ படம் ஒரு எல்சியூ படம் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ‘லியோ’ படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment