'லியோ' இசை வெளியீட்டு விழா திடீர் ரத்து.. விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாதம் 30ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற இருப்பதாக கூறப்பட்டது.
இதற்கான செட் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது திடீரென இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் விஜய் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ’லியோ’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ’லியோ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக டிக்கெட் கேட்டு பல கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன, எனவே பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு ’லியோ’ ஆடியோ வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். ரசிகர்கள் விருப்பத்திற்கு ஏற்ப அடிக்கடி ’லியோ’ படத்தின் அப்டேட்டுகளை வெளியிடுவோம்’ என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் பின்குறிப்பாக ’பலர் நினைப்பது போல் இது அரசியல் அழுத்தங்களால் அல்லது வேறு காரணங்களால் அல்ல என்றும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ’லியோ’ ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் ’என் நெஞ்சில் குடியிருக்கும்’ என்ற விஜய்யின் குரலை கேட்க முடியவில்லை என்று ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
Considering overflowing passes requests & safety constraints, we have decided not to conduct the Leo Audio Launch.
— Seven Screen Studio (@7screenstudio) September 26, 2023
In respect of the fans' wishes, we will keep you engaged with frequent updates.
P.S. As many would imagine, this is not due to political pressure or any other…
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com