'லியோ' இசை வெளியீடு.. தயாரிப்பாளர் கொடுத்த தரமான அப்டேட்..!

  • IndiaGlitz, [Tuesday,June 20 2023]

தளபதி விஜய் நடித்து வரும் ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர் லலித் தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் லலித் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் இந்த மாதத்திற்குள் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக புரமோஷன் பணிகளை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் விஜய்யின் பிறந்த நாளின் போது சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது. இதனை அடுத்து இசை வெளியீட்டு விழாவை வழக்கம் போல் பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு இன்னும் 15 நாட்களில் வெளியாகும் என்றும் அதுவரை ரசிகர்கள் பொறுமை காக்கவும் என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் தயாரிப்பாளர் லலித் கூறியுள்ளார். எனவே விஜய்யின் குட்டிக்கதையை கேட்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

மேலும் இந்த படம் லோகேஷ் கனகராஜ் எல்.சி.யூ படமா? அல்லது தனித்துவமான படமா? என்பதை படம் பார்த்த பிறகு மட்டுமே ரசிகர்கள் புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.