12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் களைகட்டும் மதுரை.. 'லியோ' இசை வெளியீட்டு தேதி இதுவா?
- IndiaGlitz, [Monday,August 07 2023]
தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்
‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையை தாண்டி வேறு ஒரு நகரில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 29 அல்லது 30 இல் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2011 ஆம் ஆண்டு விஜய் நடித்த ’வேலாயுதம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மதுரை ‘லியோ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவால் களைகட்டப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ‘லியோ’ திரைப்படத்தின் டிரைலர் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ள ‘லியோ’ படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.