'லியோ' இசை வெளியீட்டு விழா இந்த தேதியிலா? சென்னையா? மலேசியாவா?

  • IndiaGlitz, [Saturday,August 19 2023]

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை அக்டோபர் 19ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே புரோமோஷன் பணிகளையும் தொடங்க உள்ளனர்.

முதல் கட்டமாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. மலேசியாவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தப்படும் என்று கூறப்பட்ட நிலையில் அதன் பின் சென்னையில் நடத்தப்படும் என்றும் மதுரையில் நடத்தப்படும் என்றும் பல்வேறு செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி மலேசியாவில் ’லியோ’ இசை வெளியீட்டு விழா நடக்க இருப்பதாக தெரிகிறது. மேலும் இந்த விழா அக்டோபர் ஐந்தாம் தேதி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

முதல் முறையாக தளபதி விஜய் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தமிழகத்தை தாண்டி வெளிநாட்டில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் கூறும் குட்டி கதையை கேட்க அவர் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

உபி முதல்வரை சந்திப்பது இந்த சலுகையை பெறவா? செய்தியாளர் கேள்விக்கு ரஜினிகாந்த் பதில்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று இரவு 7 மணிக்கு உத்தரப் பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி நிலையில் முதல்வரிடம் சலுகையை

25 வயதில் சீரியல் நடிகர் மாரடைப்பால் மரணம்.. அதிர்ச்சியில் சின்னத்திரை நட்சத்திரங்கள்..!

தமிழ் மற்றும் ஹிந்தி சீரியல்களில் நடித்து வரும் நடிகர் ஒருவர் 25 வயதில் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தது சின்ன திரை உலக நட்சத்திரங்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

பிரபாஸ் ஜோடியாகும் விக்ரம், சிம்பு பட நடிகைகள்..!

 பிரபாஸ் நடித்த 'பாகுபலி' மற்றும்' பாகுபலி 2' ஆகிய இரண்டு வெற்றி படங்களுக்கு பின்னர் அவர் நடித்த 'சாஹோ' 'ராதே ஷ்யாம்' மற்றும் 'ஆதிபுருஷ்' ஆகிய மூன்று படங்களும் தோல்வி அடைந்தாலும்

நல்லவனா இருந்தா கடைசி வரைக்கும் நல்லா இருக்க முடியாது: யோகிபாபுவின் 'லக்கிமேன்' டிரைலர்..!

யோகி பாபு காமெடியனாக நடித்த பல திரைப்படங்கள் ஒரு பக்கம் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கும் நிலையில், அவர் ஹீரோவாக நடிக்கும் சில படங்களும் அவ்வப்போது ரிலீஸ் ஆகி வெற்றி பெற்று வருகின்றன என்பதை

மீண்டும் போலீஸ் கேரக்டர்.. மீண்டும் அனிருத்.. சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்..!

நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான 'காக்கிச்சட்டை' என்ற திரைப்படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்த நிலையில் தற்போது 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு போலீஸ்