பேரழிவு! ஏற்றுக்கொள்ள முடியாத அலட்சியம்.. ரயில் விபத்து குறித்து 'லியோ' நடிகையின் ஆவேச பதிவு..!

  • IndiaGlitz, [Saturday,June 03 2023]

பேரழிவு! ஏற்றுக்கொள்ள முடியாத அலட்சியம்.. ரயில் விபத்து குறித்து ‘லியோ’ நடிகையின் ஆவேச பதிவு..!

ஒடிசா மாநிலத்தில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தில் சுமார் 300 பேர் பலியாகி உள்ளதாகவும் சுமார் 1000 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்திய ராணுவம் உள்பட மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த விபத்து ரயில்வே ஊழியர்களின் அலட்சியம் என்று நெட்டிசன்கள் கூறி வரும் நிலையில் இந்த விபத்தில் பலியானவர்களுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி சம்பவ இடத்திற்கு நேரில் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி உள்பட ஒரு சில அமைச்சர்கள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் நடித்து வரும் ’லியோ’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கும் நடிகை பிரியா ஆனந்த் இந்த விபத்து குறித்து தனது சமூக வலைத்தளத்தில் ’மிகப்பெரிய பேரழிவு, ஏற்றுக்கொள்ள முடியாத அலட்சியம்’ என்று பதிவு செய்துள்ளார். அவரது பதிவுக்கு பெரும்பாலான நெட்டிசன்கள் ஆதரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.